ஜேர்மனியில் சிறந்த பிரீமியம் கார் விருது பெற்ற Hyundai IONIQ 9
Hyundai IONIQ 9 ஜேர்மனியின் 2026-ஆம் ஆண்டின் சிறந்த பிரீமியம் கார் விருதை பெற்றுள்ளது.
Hyundai நிறுவனத்தின் புதிய மின்சார SUV மொடல் IONIQ 9, ஜேர்மனியில் 2026-ஆம் ஆண்டிற்கான 'German Premium Car of the Year' விருதை வென்றுள்ளது.
3 வரிசை இருக்கைகள் கொண்ட இந்த மொடல், அதன் நவீன வடிவமைப்பு, அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட interior வசதிகளால் GCOTY (German Car of the Year) நடுவர் குழுவினரால் பாராட்டப்பட்டது.
இந்த மொடல், Hyundai-யின் E-GMP தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, 800-வோல்ட் சார்ஜிங் வசதியுடன், 10 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை பேட்டரியை வெறும் 24 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.
IONIQ 9-ன் உட்புற வடிவமைப்பு, lounge போன்ற அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
6 அல்லது 7 பயணிகளுக்கான இடம் மற்றும் லக்கேஜ் வைக்கும் வசதியுடன், இது பிரீமியம் வகை மின்சார வாகனங்களில் புதிய தரங்களை நிர்ணயிக்கிறது.
GCOTY விருது, 40 சுதந்திரமான மோட்டார் பத்திரிகையாளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. Compact, Premium, Luxury, New Energy மற்றும் Performance என 5 பிரிவுகளில் தெரிவு செய்யப்படுகிறது.
IONIQ 9, ஜேர்மனியில் அறிமுகமான மூன்று மாதங்களுக்குள் இந்த விருதை வென்று Hyundai-யின் மின்சார வாகன வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றத்தை காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |