Hyundai-Kia இணைந்து எடுத்த அதிரடி முடிவு., EV கார்களை அதிகரிக்க திட்டம்
தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களான Hyundai Motor மற்றும் அதன் துணை நிறுவனமான Kia Corporation ஆகியவை மின்சார கார்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பது தொடர்பாக முக்கிய முடிவை எடுத்துள்ளன.
இந்தியாவில் உள்ள பேட்டரி உற்பத்தி நிறுவனமான Exide Energy Solutions நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதன் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார் சந்தையை விரிவுபடுத்த எக்ஸைட் எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கரியமில வாயுவைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் மின்சார கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா R&D பிரிவுத் தலைவர் Hewan Yang இது குறித்து கூறுகையில், எலக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை உள்நாட்டிலேயே sourcing செய்வதன் மூலம் அவற்றின் செலவுகளைக் குறைக்க முடியும் என்றார்.
இந்திய சந்தையில் வெளியாகும் மின்சார கார்களில் உள்ளூர் பேட்டரிகளைப் பயன்படுத்தி EV கார் சந்தையில் முன்னணியில் இருப்பதே தங்களது நோக்கம் என்று ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது Ioniq 5, Kova, Kia EV6 ஆகிய எலக்ட்ரிக் கார்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
ஹூண்டாய் மோட்டார் 2025-ஆம் ஆண்டில் புதிய மின்சார காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
எக்ஸைட் எனர்ஜி பல ஆண்டுகளாக அமில பேட்டரிகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. Exide Energy Solutions என்பது Exide Industries-ன் துணை நிறுவனமாகும். 2022-இல், எக்ஸைட் lithium-ion cell-கள் உற்பத்தித் துறையில் நுழைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Hyundai Electric Cars, KIA Electric cars, Upcoming Electric Cars