Hyundai-யின் 360 டிகிரி திரும்பும் IONIQ 5 மின்சார கார் அறிமுகம்: அசர வைக்கும் சிறப்பம்சங்களின் விவரம்
ஹூண்டாய் நிறுவனம் 360 டிகிரி கோணத்தில் திரும்ப கூடிய மின்சார காரை அறிமுகப்படுத்தி ஆச்சரியம் தந்துள்ளது.
ஹூண்டாய் புதிய அறிமுகம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கார் கண்காட்சியில் ஹூண்டாய் நிறுவனம்(Hyundai) தன்னுடைய 360 டிகிரி கோணத்தில் திரும்ப கூடிய மின்சார காரை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
நண்டு மாதிரியை அடிப்படையாக (Crab Driving mode) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மின்சார கார் பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
We’re turning ‘The New MOBIS’ vision into reality at @CES 2024. Our CES showcase this year featured the production-ready advanced concept vehicle, MOBION. As a huge leap forward from the conceptual mockups of the https://t.co/9XhY32zX2O Series, MOBION represents our aspiration… pic.twitter.com/MOlIlb3tFq
— Hyundai Mobis Global (@global_mobis) January 12, 2024
அத்துடன் இது எதிர்காலத்தில் நெரிசல் மிகுந்த இடங்களில் ஏற்படும் பார்க்கிங் பிரச்சனைகளுக்கு மிகப்பெரிய தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் மொபிஸின் 360 டிகிரி கார்
ஹூண்டாய் நிறுவனம் கொரியாவில் உள்ள தன்னுடைய மூடிய கதவுகளுக்கு பின்னால் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கியுள்ள IONIQ 5 மற்றும் IONIQ 6 மின்சார கார்கள்(Hyundai e-Corner system) மூலம் அனைத்து இடங்களிலும் தலையங்கத்தில் இடம் பிடித்துள்ளனர்.
Mercedes Benz, Porsche மற்றும் பிற பிரீமியம் கார்களில் 4 சக்கரங்களையும் கட்டுப்படுத்தும் 4-வீல் ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தை (4-wheel steering technology) கொண்டு இருப்பதை பார்த்து இருப்போம்.
இந்நிலையில் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம்(Hyundai Mobis) அனைவரையும் அசர வைக்கும் விதமாக நண்டு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு 360 டிகிரி திரும்பும் IONIQ 5 மற்றும் IONIQ 6 என்ற மின்சார கார்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த IONIQ 5 மற்றும் IONIQ 6 மின்சார கார்களில் நண்டு மாதிரி சக்கரங்களுக்கான(Crab Driving mode) தொழில்நுட்பத்தை ஆன் செய்தால் 90 டிகிரி வரை இணையாக எதிர் திசையில் திரும்பி இறுக்கமான இடங்களில் பார்க் செய்ய அனுமதிக்கும்.
அத்துடன் 0 டர்ன் திருப்பும்(Zero Turn mode) தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் கார்களின் சக்கரங்கள் 90 டிகிரி திரும்பி நின்று, முன்புற சக்கரங்கள் ஒரு திசையிலும், பின்புற சக்கரங்கள் மறு திசையிலும் சுழன்று கார் 360 கோணத்தில் திரும்பி நிற்கும்.
பிவோட் டர்ன் வசதியை (Pivot Turn mode) பயன்படுத்தும் போது காரின் பின்புற சக்கரங்கள் 90 டிகிரி மட்டும் திரும்பி இறுக்கமான பார்க்கிங் இடங்களில் சீராக நிறுத்த உதவுகிறது.
இறுதியாக டயகனல் டிரைவிங் வசதியில் (Diagonal Driving mode), கார் வேகமாக செல்லும் போது முன் செல்லும் காரை விலகி செல்வதற்காக காரின் சக்கரங்கள் சற்று விலகி ஒரே திசையில் சுழல்கிறது. இதன் மூலம் போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் எளிதாக கார்களை எடுத்துச் செல்லலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Hyundai, Ioniq 5, Hyundai’s Mobis e-Corner, hyundai, ioniq5, cartok, tech, techtok, Zero Turn,Crab Driving, Pivot Turn,