நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில் தான் உள்ளது.., ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் நான் கிடையாது என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்த மக்களவை தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்குரிய தேர்தல். மிக பெருமபான்மையான இடங்களை பெற்று பாஜக வெற்றி பெறும்.
என்னை பொறுத்தவரை நான் என்றுமே பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் அல்ல. கட்சிக்காக விசுவாசமாக உழைப்பவன்.
என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில் தான் உள்ளது.
இன்று இருக்கிற அரசியல் சூழ்நிலையில் நாட்டில் இருக்கக்கூடிய, அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற ஒரே இயக்கமாக அதிமுக மீட்பு குழு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |