அடிக்கும் வெயிலுக்கு கரும்பு ஜூஸ் குடிக்கிறீங்களா? எச்சரிக்கை விடுக்கும் ICMR
இந்தியாவில் நிலவும் அதிகப்படியான வெயில் காரணமாக கரும்பு ஜூஸ் குடிப்பதால் பாதிப்பு ஏற்படும் என ICMR எச்சரிக்கை விடுத்துள்ளது.
ICMR எச்சரிக்கை
இந்தியாவில் அதிகப்படியான வெப்பம் நிலவி வருவதால் மக்கள் பெரிதளவு பாதித்து வருகின்றனர். இதனால், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள ஜூஸ்களையும் குளிரூட்டப்பட்ட சாஃப்ட் ட்ரிங்ஸ்களையும் அருந்துகின்றனர்.
அதிலும் குறிப்பாக கரும்பு ஜூஸை அதிகமாக குடிக்கின்றனர். இதனால், எங்கு பார்த்தாலும் கரும்பு ஜூஸ் கடைகள் தான் தென்படுகின்றன.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ICMR எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது நாம் அளவுக்கதிமாக கரும்புச்சாற்றை எடுத்துக்கொள்ளும்போது அதில் உள்ள சர்க்கரையின் அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.
ஆரோக்யமான உணவு முறை குறித்து ICMR மற்றும் தேசிய ஊட்டச்சத்து கழகம் (NIN) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "100 மில்லி லிட்டர் கரும்புச்சாற்றில் 13-15 கிராம் அளவில் சர்க்கரை உள்ளது.
இந்த அளவு அதிகம் என்பதால் கரும்புச்சாறு குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், பழச்சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், செயற்கை நிறமிகள் சேர்க்க்கப்பட்ட கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட சாஃப் டிரிங்ஸ்களைத் தவிர்த்து மோர், இளநீர், சர்க்கரை சேர்க்கபடாத பழச்சாறுகள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |