“பிரித்தானியா சிறந்த நாடு” நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் ரிஷி சுனக் வெளியிட்ட அறிக்கை
யுனைடெட் கிங்டம் ஒரு சிறந்த நாடு, ஆனால் நாம் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்கிறோம் என ரிஷி சுனக் அறிக்கை.
வேலையைச் செய்ய நான் நாள் முழுவதும் உழைப்பேன் எனவும் ரிஷி சுனக் அறிக்கையில் தகவல்.
நான் பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் நிற்கிறேன் என முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் உறுதிப்படுத்தியதுடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரித்தானியாவின் பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகியதை தொடர்ந்து, நாட்டிற்கான புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு கன்சர்வேட்டிவ் கட்சி தள்ளப்பட்டது.
இந்நிலையில் பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான தேர்தலில் தான் முன்னணியில் நிற்பதாக முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் உறுதிப்படுத்தியுள்ளார்.
The United Kingdom is a great country but we face a profound economic crisis.
— Rishi Sunak (@RishiSunak) October 23, 2022
That’s why I am standing to be Leader of the Conservative Party and your next Prime Minister.
I want to fix our economy, unite our Party and deliver for our country. pic.twitter.com/BppG9CytAK
ரிஷி சுனக் தனது போட்டியாளர்களான முன்னாள் பாதுகாப்பு மந்திரி பென்னி மோர்டான்ட் மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோரை விட கன்சர்வேடிவ் சட்டமியற்றுபவர்களிடமிருந்து அதிக ஆதரவைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையில் ரிஷி சுனக் வெளியிட்ட ட்விட்டர் அறிக்கை ஒன்றில், "யுனைடெட் கிங்டம் ஒரு சிறந்த நாடு, ஆனால் நாம் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம்," அதனால் தான் நான் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் உங்களின் அடுத்த பிரதமராகவும் உருவாகுவதற்கான போட்டியில் நிற்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
AFP
அத்துடன் "நான் வழிநடத்தும் அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஒருமைப்பாடு, தொழில்முறை மற்றும் பொறுப்புக்கூறல் இருக்கும் என்றும், அந்த வேலையைச் செய்ய நான் நாள் முழுவதும் உழைப்பேன்," என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு; மூன்று தலைமுறைகளுக்கு பிறகு இளவரசர் வில்லியமிற்கு கிடைத்துள்ள பெருமை: மன்னர் முடிசூட்டு விழாவில் முக்கிய பங்கு
மேலும் சுனக் அமைச்சரவையில் பணியாற்றிய போது தனது சாதனை பதிவை அவரது அறிக்கையில் எடுத்துரைத்துள்ளார்.