மூன்று தலைமுறைகளுக்கு பிறகு இளவரசர் வில்லியமிற்கு கிடைத்துள்ள பெருமை: மன்னர் முடிசூட்டு விழாவில் முக்கிய பங்கு
மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை திட்டமிடுவதில் வேல்ஸ் இளவரசர் வில்லியம் முக்கிய பங்கு.
மூன்று தலைமுறைகளுக்கு பிறகு முடிசூட்டு விழாவில் அரச வரிசையின் அடுத்த வாரிசு முக்கிய பங்கு வகிப்பார் என அறிவிப்பு.
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை திட்டமிடுவதில் வேல்ஸ் இளவரசர் வில்லியம் தீவிர பங்கு வகிப்பார் என கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இருப்பினும் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் 6ம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
POOL/AFP via Getty Images
இந்நிலையில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் வேல்ஸ் இளவரசராக பொறுப்பேற்றுக் கொண்ட இளவரசர் வில்லியம் முக்கிய பங்கு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தொன்மையான, நிலப்பிரபுத்துவ அல்லது ஏகாதிபத்திய கூறுகள் எதுவும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் இடம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த இளவரசர் வில்லியம் தீவிரப் பங்கு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று தலைமுறைகளுக்கு பிறகு மன்னரின் முடிசூட்டு விழாவில் அரச வரிசையின் அடுத்த வாரிசு முதல் முறையாக திட்டமிடுவதில் இறங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BUCKINGHAM PALACE/AFP via Getty
அதாவது, தாயார் இரண்டாம் எலிசபெத் முடிசூட்டப்பட்ட போது தற்போதைய மன்னர் சார்லஸுக்கு வெறும் நான்கு வயது மற்றும் மறைந்த ராணி தனது தந்தையின் முடிசூட்டப்பட்ட நேரத்தில் 11 வயது. எனவே முடிசூட்டு விழாவில் நடவடிக்கைகளில் இருவரும் முறையான பங்கை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் மூன்று தலைமுறைகளுக்கு பிறகு முடிசூட்டு விழாவில் திட்டமிடுதலில் பங்கேற்கும் வாரிசு என்ற பெருமையை இளவரசர் வில்லியம் பெற்றுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: டோரி அரசாங்கத்தின் மீது அதிகரிக்கும் வெறுப்பு: பொது தேர்தலை விரும்பும் பிரித்தானிய மக்கள்
இதனிடையில் முடிசூட்டு குழுவில் யார் பங்கேற்பார்கள் என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
GETTY