டோரி அரசாங்கத்தின் மீது அதிகரிக்கும் வெறுப்பு: பொது தேர்தலை விரும்பும் பிரித்தானிய மக்கள்
டோரி அரசாங்கத்திற்கு எதிராக 100,000 கையொப்பங்களை எட்டிய மனு.
பிரித்தானிய பொதுமக்கள் உடனடியாக பொதுத் தேர்தலை கோரியுள்ளனர்.
பிரித்தானியாவின் பிரதமர் பதவியிலிருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பொது தேர்தலுக்கான வேண்டுகோள்கள் பொதுமக்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளன.
பிரித்தானியாவில் கொரோனா கால ஊரடங்கின் போது நடைபெற்ற விழாக்களில் பிரதமாக இருந்த போரிஸ் ஜான்சன் விதிகளை மீறி கொண்டாங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, தனது பிரதமர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெற்ற அடுத்த பிரதமருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றிப் பெற்றார், ஆனால் அவரது அரசாங்கத்தின் மோசமான பொருளாதார திட்டங்களால் நாட்டின் சந்தை சரிவை சந்திக்கவே 44 நாட்களிலேயே தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
mirror
இதனால் தற்போது மீண்டும் பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான சூழ்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதற்கான போட்டியில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
லிஸ் டிரஸுக்கு பதிலாக மீண்டும் தலைமைப் போட்டியில் டோரி கட்சி உறுப்பினர்களால் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார், இதன் மூலம் ஆறு ஆண்டுகளில் பிரித்தானிய பொதுமக்கள் நான்காவது முறையாக புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதைக் காண்பார்கள்.
இந்நிலையில் பிரித்தானியாவில் மிரர் பத்திரிகை நடத்திய பொது தேர்தலுக்கான கையெழுத்துக்கள் பதிவாக்கத்தில், 100,000 பொதுமக்கள் பொதுத் தேர்தலுக்கு ஆதரவாக வாக்களித்து டோரி அரசாங்கத்தின் மீதான வெறுப்பை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
மிரர் பத்திரிக்கை நடத்திய பொது தேர்தலுக்கான கையெழுத்துக்கள் பதிவாக்கத்தில், வாக்காளர்கள் மிகவும் கோபமடைந்துள்ளனர் மற்றும் உடனடியாக பொதுத் தேர்தலை கோரியுள்ளனர் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.
mirror
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 100,000 கையொப்பங்களை எட்டிய மனுவுடன் ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே பொது தேர்தலுக்கான தங்கள் குரல்களை எழுப்பியுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு; மக்கள் உடனடியாக நகரை வெளியேற வேண்டும்: உக்ரைனியர்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை
ஜெனிஃபர் என்ற வாசகர் எழுத்து உள்ள கருத்தில், இந்த கட்டத்தில் பழமைவாதிகள் தேசிய நலனுக்காக செயல்பட முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த முழு குழப்பமும் அவர்கள் தங்கள் வேலையை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். எனவே இது போதுமானது மற்றும் உடனடியாக பொது தேர்தல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.