மக்கள் உடனடியாக நகரை வெளியேற வேண்டும்: உக்ரைனியர்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைனின் எதிர்ப்பு தாக்குதல் அதிகரித்து இருப்பதால் கெர்சன் நகரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.
அனைத்து துறைகள் மற்றும் சிவில் நிர்வாக அமைச்சகங்கள் இன்று டினிப்ரோவின் இடது கரையை கடக்க வேண்டும்.
ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, ரஷ்யாவின் பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனின் மிக முக்கியமான நான்கு நகரங்களை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யா தன்னுடன் இணைத்து கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கு உக்ரைன் மற்றும் உலக நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்த நிலையில், ரஷ்யாவின் அங்கமாக அறிவித்த பகுதிகளை மீட்டெடுக்கும் பணியில் உக்ரைனிய படைகள் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
EPA-EFE
இந்நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சனில் உக்ரைனின் எதிர்பார்க்கப்படும் எதிர்த்தாக்குதல் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் உடனடியாக நகரத்தை விட்டு வெளியேறுமாறு ரஷ்யாவால் நிறுவப்பட்ட அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கெர்சனில் இருந்து அனைத்து குடிமக்களும் உடனடியாக வெளியேற வேண்டும், மற்றும் அனைத்து துறைகள் மற்றும் சிவில் நிர்வாக அமைச்சகங்கள் இன்று டினிப்ரோவின் இடது கரையை கடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கெர்சனின் முன்வரிசையில் பாரிய ஷெல் தாக்குதல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதால் பதட்டமான சூழ்நிலை அதிகரித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: இளவரசர் வில்லியமிடம் கோபம் கொண்ட மனைவி கேட் மிடில்டன்: இணையத்தில் பரவும் புகைப்படம்
இதனால் கடந்த வாரங்களில் ரஷ்யப் படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சன் பகுதியில் குடிமக்களை டினிப்ரோ ஆற்றின் மீது நகர்த்த தொடங்கின, இது உக்ரேனிய குடிமக்களை வலுக்கட்டாயமாக மீள்குடியேற்றும் ரஷ்யாவின் முயற்சியாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.