இளவரசர் வில்லியமிடம் கோபம் கொண்ட மனைவி கேட் மிடில்டன்: இணையத்தில் பரவும் புகைப்படம்
கேட் மிடில்டன் தனது கணவரான இளவரசர் வில்லியமை நோக்கி கோபமாக பார்வை செலுத்தினார்.
போலந்து சுற்றுப்பயணத்தின் போது களைப்படைந்த ராயல் ஜோடி.
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது கணவரான இளவரசர் வில்லியமை நோக்கி கோபமான பார்வையை முன்வைக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது.
பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசர் வில்லியமின் மனைவி மற்றும் இளவரசியான கேட் மிடில்டன் பெரும்பாலான பொது தோற்றங்களில் தனது வழக்கமான மகிழ்ச்சியான முகப்பாவங்களுடனும், ஜாலியான நடத்தையுடனுமே காணப்படுவார்.
REX/Shutterstock
ஆனால் 2017ம் ஆண்டு போலந்து சுற்றுப்பயணத்தின் போது தோட்ட விருந்தில் கலந்து கொண்ட பிறகு, இளவரசர் வில்லியமை பார்த்து இளவரசி மற்றும் அவரது மனைவியாகிய கேட் மிடில்டன் கோபமான பார்வையை முன்வைத்தார்.
சில மணி நேரங்களுக்கு முன்பு போலந்தின் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள கூட்டத்தினரிடம் இருந்த இளவரசி கேட்டின் புன்னகை மற்றும் ஜாலியான அரட்டைகள் மற்றும் நடத்தைகள் தோட்ட விருந்தில் கலந்து கொண்ட பிறகு முற்றிலும் வேறுபட்டதாக தோன்றியது.
Splash News
கேட் மிடில்டன் எதற்காக சிடுசிடுப்புடன் காணப்பட்டார் என்று தெளிவாக தெரியவில்லை.
கூடுதல் செய்திகளுக்கு: வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முன்னாள் சீன ஜனாதிபதி: பரபரப்பு வீடியோ ஆதாரம்
ஆனால் இந்த பயணத்தின் போது இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகியோர் தங்கள் பெற்றோருடன் வருகை புரிந்து இருந்தனர்.
அத்துடன் அரச சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதில் ஏற்பட்ட சோர்வு மற்றும் இரண்டு இளம் குழந்தைகளை கவனித்துக் கொள்வது போன்ற காரணமாக இருக்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.