"இனரீதியாக அவமானப்படுத்தியதால், நண்பனின் மூக்கை உடைத்தேன்" உண்மை சம்பவத்தை பகிர்ந்த பராக் ஒபாமா
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது அப்போதைய நண்பரால் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், பின்னர் ஒரு முறை உடை மாற்றும் அறையில் நடந்த சண்டையில் தனது வகுப்பு தோழனின் மூக்கை உடைத்ததாக கூறியுள்ளார்.
59 வயதான ஒபாமா தனது புதிய “Renegades” எனும் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்த இளமைப் பருவ கதையை அமெரிக்காவின் பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் bruce springsteen-உடன் பகிர்ந்து கொண்டார்.
ஒபாமா தனது போட்காஸ்ட் நிகழ்ச்சியில் "நான் பள்ளியில் இருந்தபோது எனக்கு ஒரு நண்பர் இருந்தார். நாங்கள் ஒன்றாக கூடைப்பந்து விளையாடினோம்.
ஒரு முறை நாங்கள் சண்டை போட்டுக்கொண்டோம், அப்போது அவர் என்னை c**n என்று அழைத்தார்.
உண்மையில் c**ns என்றால் என்ன என்று கூட அவர் அறிந்திருக்க மாட்டார். ஆனால், அவருக்குத் தெரிந்த விடயம் என்னவென்றால், 'இதைச் சொல்வதன் மூலம் அவரால் என்னைக் காயப்படுத்த முடியும்' என்பது தான்" என்று ஒபாமா கூறினார்.
அப்போது இருவரும் உடை மாற்றும் லாக்கர் அறையில் இருந்தாதாகக் கூறிய ஓபாமா "நான் அவரை முகத்தில் ஒரு குத்து விட்டு அவரது மூக்கை உடைத்தேன்" என்றார்.
மேலும், தன்னை ஒருபோதும் அப்படி அழைக்கக்கூடாது என அங்கிருந்த சக மானவர்களிடமும் கூறியதாக அவர் தெரிவித்தார்.
