உக்ரைன் ராணுவத்தின் தந்திரோபாயங்களை பகிர முடியாது: ஜெலென்ஸ்கி அதிரடி
உக்ரைன் ராணுவத்தின் தந்திரோபாய திட்டங்களை என்னால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
மிக முக்கிய நாடுகளின் உலக தலைவர்கள் கூடும் 2023ம் ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடத்தப்பட்டது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த ஜி7 உச்சி மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் உக்ரைனுக்கான ஆதரவை தொடர்ந்து நீடிப்பது மற்றும் சீனாவின் அசுர வளர்ச்சி போன்றவை குறித்து கூடியிருந்த உலக தலைவர்கள் முக்கிய விவாதங்கள் நடத்தினர்.
The Sunday @Telegraph published a cartoon of #Zelensky at the #G7 Summit pic.twitter.com/Gg0sDHeOlT
— KyivPost (@KyivPost) May 22, 2023
இந்த மாநாட்டில் வீடியோ அழைப்பு மூலம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, கூட்டத்தின் மூன்றாவது நாளில் ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம் நேரில் வந்து இறங்கினார்.
அத்துடன் ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரை நேரில் சந்தித்து முக்கிய விவாதங்கள் நடத்தினார்.
திட்டங்களை என்னால் இங்கு கூற முடியாது
இந்நிலையில் ஹிரோஷிமாவில் செய்தியாளர்களை சந்தித்த உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, என்னால் தற்போது உங்களிடம் உக்ரைனிய ராணுவத்தின் தந்திரோபாய திட்டங்கள் குறித்து பகிர்ந்து கொள்ள முடியாது.
Zelenskyy at a press conference in Hiroshima:
— NEXTA (@nexta_tv) May 21, 2023
"I cannot share with you the tactical views of our military, but we understand that a little more, and we will win. <...> Today the military is performing very important tasks, they are in Bakhmut, at what points - I will not share,… pic.twitter.com/kGOEVwWtX1
ஆனால் நாங்கள் சிலவற்றை கூடுதலாக புரிந்து வைத்துள்ளோம், அதனால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இன்று உக்ரைனிய ராணுவம் பக்முத்-தில் சண்டையிட்டு வருகிறது, எந்த இடத்தில் என்று சொல்ல மாட்டேன், ஆனால் இவை பக்முத்-தை இன்று ரஷ்யா முழுமையாக கைப்பற்ற வில்லை என்பதை காட்டுகிறது, அதற்கு இரண்டு மூன்று விளக்கங்கள் தேவையில்லை என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.