போட்டியின் முடிவு நியாயமற்றது.. ஏமாற்றிவிட்டார்கள்! கொந்தளித்த இந்திய திரும்பிய மேரி கோம்
ஜப்பானிலிருந்து நாடு திரும்பிய இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், போட்டியிடின் முடிவு நியாயமற்றது என கொந்தளித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த மகளிர் குத்துச்சண்டை போட்டியின் ரவுண்ட் 16 சுற்றில் இந்தியாவின் மேரி கோம் தோல்வியை சந்தித்து ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.
ரவுண்ட 16 சுற்றில் இந்தியாவின் மேரி கோம், கொலம்பியாவின் valencia மோதினர். 3 சுற்றுகள் முடிவில் 3-2 என்ற கணக்கில் மேரி கோமை வீழத்தி Valencia வெற்றிப்பெற்றார்.
இந்நிலையில் இன்று டெல்லி வந்தடைந்த மேரி கோம், வெறும் கையுடன் நாடு திரும்பியதை மோசமாக உணர்கிறன், பதக்கத்துடன் நாடு திரும்ப வேண்டும் என்ற கனவுடன் இருந்தேன்.
போட்டியின் முடிவு நியாயமற்றது, ஏமாற்றிவிட்டார்கள். ரவுண்ட் 16 போட்டியில் முதல் இரண்டு சுற்றில் நான் வென்றேன், பின் எப்படி நான் தோற்க முடியும்? நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.
ரவுண்ட் 16 போட்டிக்கு முன், அதிகாரிகள் என்னிடம் வந்து நீங்கள் உங்களுடைய ஜெர்சியை அணியக்கூடாது என கூறினர்.
முதல் போட்டியில், நான் அதே ஜெர்சியை தான் அணிந்தேன், யாரும் புகார் செய்யவில்லை. அவர்கள் இதை முன்பே எங்களிடம் கூறி, எங்கள் விளையாட்டு கிட்டை சரிபார்திருக்க வேண்டும். கடைசி நேரத்தில் இப்படி செய்தது மன உளைச்சலை ஏற்படுத்தியது.
#WATCH | Yes, yes. Why not? I still have the age. I can play till 40: Boxer Mary Kom when asked about making a comeback pic.twitter.com/UHbqiHlIBP
— ANI (@ANI) July 31, 2021
அதிகாரிகள் ஏன் எங்களிடம் மட்டும் சொந்த ஜெர்சியை அணியக்கூடாது என சொன்னார்கள்? வேறு எந்த நாட்டிற்கும் சொல்லவில்லை என மேரி கோம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், எனக்கு இன்னும் வயதிருக்கிறது. நான் 40 வயது வரை விளையாடுவேன் என 38 வயதான மேரி கோம் ஊடகத்தினரிடம் கர்ஜித்தார்.