மரணப்படுக்கையில் தாய் கூறிய ரகசியம்: தனக்கு 35 சகோதரிகள் இருப்பதை அறிந்து வியப்பிலாழ்ந்த பெண்
தான் இத்தனை வருடங்களாக அப்பா என அன்புடன் அழைத்துவந்த நபர் தன் சொந்த தந்தை இல்லை என்னும் செய்தி தெரியவந்தபோது, அந்தப் பெண் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.
மரணப்படுக்கையில் தாய் கூறிய ரகசியம்
Jam Press
ஜோசபின் (Josephine Latimer) என்னும் அந்தப் பெண்ணின் தாயான ஆனிக்கு திடீரென பக்கவாதம் தாக்கியது.
மரணப்படுக்கையில் இருக்கும்போது ஆனி தன் மகளிடம் ஒரு உண்மையைக் கூறினார். அது, ஜோசபின் இதுவரை தந்தை என்று எண்ணியிருந்த ஸ்காட் என்பவர் தன் உண்மையான தந்தை அல்ல, ஜோசபினுடைய தந்தையின் பெயர் ஜான் என்பதுதான்.
Jam Press
அதிர்ச்சியடைந்த ஜோசபின், தன் தாய் இறந்தபிறகு தனது டி என் ஏ உதவியுடன் தனது தந்தையைக் குறித்து அறிந்துகொள்ள முயன்றிருக்கிறார். அப்போது, தனக்கு தந்தை வழியில் 35 சகோதர சகோதரிகள் இருப்பது ஜோசபினுக்குத் தெரியவந்துள்ளது.
தனது வீட்டின் அருகிலேயே தனது உறவினர் என நினைத்து தன்னுடன் சிறுவயதில் விளையாடிய ஒரு பெண் தன் உண்மையான சகோதரி என தெரியவரவே, தன் சகோதர சகோதரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார் ஜோசபின்.
Jam Press
என்றாலும், அவர்கள் தன்னை எப்படி ஏற்றுக்கொள்வார்களோ என்ற தயக்கத்துடனேயே அவர்களை சந்திக்க வரலாமா என கேட்டுள்ளார்.
அவர்கள், அவ்வப்போது மொத்த குடும்ப உறுப்பினர்களுமாக சந்திப்பதுண்டாம். அந்த சந்திப்பில் கலந்துகொள்ள தயக்கத்துடன் சென்ற ஜோசபின் மீது அன்பைப் பொழிந்துவிட்டார்களாம் அனைவரும்.
என்றாலும், ஜோசபினுடைய உண்மையான தந்தையான ஜான், பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். தன் தந்தையின் கல்லறையைக் காண அவரை அழைத்துச் சென்றுள்ளார்கள் அவரது இரண்டு சகோதரிகள்.
Jam Press
தந்தையின் கல்லறைக்குச் சென்ற ஜோசபின், அவரது பெயர் பொறித்த பலகை மீது உணர்ச்சி பொங்க சாய்ந்துகொண்டாராம்.
தன் தந்தை தன்னை விட்டுப் பிரிந்துபோனாலும், தனக்கு ஒரு பெரிய, அன்புடைய, குடும்பம் கிடைத்ததால், தான் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார் ஜோசபின்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |