கடைசி நேரத்தில் நடந்த டுவிஸ்ட்! அது எப்படி ஆச்சுனு எனக்கே தெரியல: மும்பையை கதற விட்ட டிவில்லியர்ஸ் ஆச்சரியம்
மும்பை அணிக்கெதிரான போட்டியில் பெங்களூரின் வெற்றிக்கு முக்கிய காரணமான டிவில்லியர்ஸ் தன்னுடைய ரன் அவுட் குறித்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில், மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின, இப்போட்டியில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பெங்களூரு அணி வீரரான, டிவில்லியர்ஸ் அற்புதமாக விளையாடி 38 பந்தில் 49 ஓட்டங்கள் குவித்து, கடைசி இரண்டு பந்தில் இரண்டு ஓட்டங்கள் தேவைப்பட்ட போது எதிர்பாரதவிதமாக ரன் அவுட் ஆகினார்.
இந்நிலையில், போட்டி முடிந்த பின் இது குறித்து அவர் கூறுகையில், முன்பு ட்ரெட்மில்லில் ரன்னிங் பயிற்சி எடுத்தேன். ஆனால் அது எனக்கு கடினமானதாக இல்லை.
இதன் காரணமாக எனக்கு அதில் திருப்தி இல்லை. தற்போது மணலில் ரன்னிங் பயிற்சி எடுக்கிறேன். இந்த போட்டியில் வெற்றிக்கு அருகாமையில் இருக்கும் போது நான் எப்படி ரன்அவுட் ஆனேன் என்று எனக்கு உண்மையில் தெரியவே இல்லை.
நான் பந்தினை தட்டிவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடத் தொடங்கியபோது பின்னோக்கி ஓடுவதைப் போல உணர்ந்தேன்.
அது ஒரு அருமையான த்ரோ நான் கிரீசுக்கு செல்வதற்கு முன்னாலேயே பந்து வேகமாக விக்கெட் கீப்பருக்கு வந்தது. அதனால் டைவ் அடித்தும் எனது விக்கெட்டை காப்பாற்ற .முயன்றேன், ஆனால் அவுட் ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
