'நான் சாகும் வரை முஸ்லீம் தான்'.. ஆனால் இது மட்டும்: வைரலாகும் குஷ்புவின் பதிவு
ராமர் குறித்து நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பதிவிட்டுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை குஷ்பு பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து வருகிறார்.
இவர் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல், மோடி ஆட்சியில் ராமரை பார்க்க போகிறோம், பெருமையாக உள்ளது என்று பேசியிருந்தார்.
குஷ்புவின் பதிவு
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து பேசி வருவார். அந்தவகையில், முன்னதாக பாஜக குறித்து குஷ்பூ பகிர்ந்திருந்த பழைய பதிவை ரசிகர் ஒருவர் அவரது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
I will still die as a muslim brother. I haven't changed my religion. Nor ever will. For some, like you, devotion is related to religion. To me, it's about oneness. I believe God is one. #Ram is worshipped by all. Broaden your thoughts, you will feel better. #JaiShriRam ??? https://t.co/Go2VXA9XvT
— KhushbuSundar (@khushsundar) January 22, 2024
அதற்கு பதிலளித்த குஷ்பு, "நான் சாகும் வரை முஸ்லீம் தான். நான் மதம் மாறவில்லை, மாறவும் மாட்டேன். உங்களை பொறுத்தவரை ஆன்மீகம் மதம் சார்ந்தது. ஆனால் என்னை பொறுத்தவரை அது ஒருமைப்பாடு பற்றியது.
கடவுள் ஒருவர் என்று நான் நம்புகிறேன். ராமர் அனைவராலும் வணங்கப்படுகிறார். உங்கள் எண்ணங்களை விரிவுபடுத்துங்கள், நீங்கள் நன்றாக உணருவீர்கள்" என்று கூறியுள்ளார். தற்போது, இவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |