உலகக் கோப்பையை ஜெயிக்காமல் மெஸ்ஸி ஓய்வு பெற பிரார்த்திக்கிறேன்! பிரபலமான பெண் விட்ட சாபம்
உலகக் கோப்பையை ஜெயிக்காமல் மெஸ்ஸி ஓய்வு பெற கடவுளை பிரார்த்திப்பதாக பிரபல தொகுப்பாளர் பிர்ட்ஜெட் ஓடோ தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா வெற்றி
அர்ஜென்டினா - நெதர்லாந்து இடையே நடந்த போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது, இதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதியில் குரோஷியாவை அர்ஜென்டினா வென்றது.
நெதர்லாந்து உடனான போட்டிக்கு பின்னரான மெஸ்ஸி நேர்காணலில், நெதர்லாந்து வீரரைப் பற்றி தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு போட்டி அதிகாரிகள் சிலரை திட்டியதையும் காண முடிந்தது.
இது தொடர்பில்பேசிய கானா நாட்டை சேர்ந்த ஊடக பிரபலம் மற்றும் தொகுப்பாளர் பிர்ட்ஜிட் ஓட்டோ, மெஸ்ஸி மற்றும் அவரது அணி தோழர்களின் கேவலமான நடத்தையால் பயிற்சியாளர் கூட அவமானப்படுத்தப்பட்டார்.
ghanaweb
பிரார்த்தனை செய்கிறேன்
குரோஷியா, அர்ஜென்டினாவை தோற்கடிப்பது மட்டுமல்லாமல், உலகக் கோப்பையை வெல்லாமல் மெஸ்ஸி ஓய்வு பெறவும் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டார்.
ஆனால், நேற்றைய போட்டியில் குரோஷியாவை அர்ஜென்டினா வீழ்த்தியது.
18ஆம் திகதி இறுதிப்போட்டி நடக்கும் நிலையில் அது தொடர்பில் பிரிட்ஜிட் பதிவிட்ட கருத்து பலிக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.