Jail -ல செந்தில் பாலாஜியை பார்த்தேன்.. உப்பில்லாத சாப்பாடு.. அவ்ளோ கஷ்டம்: ரவீந்திரன் Open up
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறையில் நேரில் பாத்தேன் என அங்கு நடந்த சம்பவங்களை பற்றி தயாரிப்பாளர் ரவீந்திரன் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பகிர்ந்துள்ளார்.
உட்கார்ந்து எழுந்திருக்க முடியல
தயாரிப்பாளர் ரவீந்திரன் அளித்த பேட்டியில், "சிறையில் எனக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது. உட்கார முடியவில்லை, எழுந்திருக்க முடியவில்லை. முட்டி வலி அதிகமாக இருந்தது.
எனக்கு உதவி செய்வதற்கு ஆள் வேண்டும். இல்லையென்றால் என்னால் எழுந்திருக்க முடியாது. அந்த சப்போர்ட் எனக்கு அங்கு கிடைத்தது. நான் 'ஏ' கிளாஸ் வேண்டும் என்று கேட்டேன். ஆனால், என்னுடைய எதிர் தரப்பினர் அதை தடுத்துவிட்டனர்.
ஒரு பிளாக்கில் 40 முதல் 50 பேர் வரை இருக்கின்றனர். என்னால் கீழே உட்கார முடியாது. நான் கீழே உட்கார்ந்து எழும்ப வேண்டும் என்றால் 3 ஆள் வேண்டும். அங்குள்ள சிறைக்காவலர்கள் தான் பாவம்" என்றார்.
அமைச்சராக இருந்தாலும் அவ்ளோ தான்
மேலும் பேசிய அவர், "சிறையில் இரண்டாவது நாள் வாக்கிங்க் செல்லும் போது செந்தில் பாலாஜியை நேரில் பார்த்தேன். வெளியில் சொல்லும் மாதிரி அவருக்கு சிறையில் வசதிகள் இல்லை.
ரொம்ப இளைச்சு போய் இருக்கிறார். அங்கு அவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கிறார். அவர் சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு இல்லை. உடல் நலக்குறைவாலும், மன அழுத்தத்தினாலும் அதிகமாக கஷ்டப்படுகிறார்.
நான் அவரை அடிக்கடி பார்த்தேன். நார்மலான மெடிக்கல் cell -ல் தான் இருக்கிறார். கூடுதலாக அவருக்கு பாதுகாப்பு மட்டும் இருக்கும், மற்றபடி ஒன்றும் இல்லை" என்றார்.