இஸ்ரோவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன்.., நாராயணன் உறுதி
இஸ்ரோவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன் என்று புதிய தலைவர் நாராயணன் உறுதி அளித்துள்ளார்.
நாராயணன் உறுதி
இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.நாராயணன். இவர், வரும் 14-ம் திகதி இஸ்ரோவின் தலைவராக பதவியேற்க உள்ளார்.
இவர் கடந்த 40 ஆண்டுகளாக இஸ்ரோவில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இஸ்ரோவில் பல்வேறு திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியதற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் கூறுகையில், "இந்தியாவிற்கான தெளிவான திட்டம் உள்ளது. மேலும், எங்களிடம் சிறந்த திறமை இருப்பதால், இஸ்ரோவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன் என்று நம்புகிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |