சென்னை அருகே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம் - உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?
திருப்போரூரில் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
நொறுங்கிய விமானம்
இந்திய விமான படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் PC-7 Mk II ஒன்று, இன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.

இந்த விமானம் சென்னை அருகே உள்ள திருப்போரூரின் உப்பளம் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, மதியம் 14:25 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்து தொழிற்சாலைக்கு சொந்தமான பகுதியில் விழுந்துள்ளது.

இதில் பயணித்த விமானம் பாராசூட் மூலம், குதித்து உயிர் தப்பியுள்ளார். ஹெலிகாப்டர் மூலம் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமானம் சகதியில் விழுந்து நொறுங்கியதில், அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த காயமோ சேதமோ ஏற்படவில்லை.
An Indian Air Force PC-7 Mk II trainer aircraft met with an accident during a routine training mission and crashed at about 1425 Hr near Tambaram, Chennai, today. The pilot ejected safely, and no damage to civil property has been reported. A Court of Inquiry has been constituted…
— Indian Air Force (@IAF_MCC) November 14, 2025
விமான விபத்திற்கான காரணம் குறித்து கண்டறிய நீதிமன்ற விசாரணை நடைபெறும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
சாலையில் தரையிறங்கிய விமானம்
இதேபோல் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதி சேதமடைந்ததால், புதுக்கோட்டை அருகே கீரனூர் - நார்த்தமலை சாலையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இரு விமானிகளும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்றும் விமானம் ஒன்று விபத்தை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |