வளர்ப்பு பிராணியால் லிஃப்டில் வைத்து பெண்ணை தாக்கிய IAS அதிகாரி: வெளியான காட்சிகள்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவரை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரவி வருகிறது.
பெண்ணை தாக்கிய அதிகாரி
உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில், குடியிருப்பில் உள்ள லிஃப்டில் பெண் ஒருவர் தனது வளர்ப்பு பிராணியை அழைத்து செல்ல முயன்றார்.
அப்போது, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனைதொடர்ந்து, லிஃப்டில் வைத்து இரண்டு பேருக்கும் பேச்சுவார்த்தை முற்றிய போது தனது செல்போனை எடுக்க ஐஏஎஸ் அதிகாரி முயன்றார்.
உடனே அந்த பெண், செல்போனை பறிக்க முயற்சிக்கும் போது அதிகாரி அவரை தாக்குகிறார்.
வைரல் வீடியோ
அப்போது, சிறிது நேரத்திலேயே அந்த பெண்ணின் கணவர் அங்கு வந்து அதிகாரியை தாக்குகிறார்.
In the latest episode of #Noida's #dog conflict, a retired IAS officer purportedly slaps a woman resident of a high-rise society.
— Kishor Dwivedi (@Kishor__Dwivedi) October 30, 2023
Details and blame-game awaited. Such a sorry state of affairs! https://t.co/TvYhvxzlZI pic.twitter.com/95ks70BXLF
இந்த காட்சிகள் அனைத்தும் லிஃப்டில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதன் பின்னர், தகவலிருந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |