மூத்த அதிகாரியை விமர்சித்ததால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி.., யார் இவர்?
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்ட காரணத்தை பற்றி இந்த இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
யார் அவர்?
ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர், மாஜிஸ்திரேட் போன்ற மகத்தான அதிகாரத்தைப் பெறுகிறார்கள். இருப்பினும் அவர்கள், சில சமயங்களில் பல்வேறு காரணங்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கையை எதிர்கொள்கின்றனர்.
அந்தவகையில், இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரி ஒருவர் கடந்த ஆண்டு இந்த நடவடிக்கையை சந்தித்துள்ளார்.
அவர், கலெக்டர் சகோதரர் (collector bro) என்று பிரபலமாக அறியப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி என் பிரசாந்த் ( N Prasanth) ஆவார். மேலும் இவர் 2007 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
இவர், சமூக ஊடகங்களில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியை விமர்சித்ததற்காக நவம்பர் 2024 முதல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதாவது, சமூக ஊடகங்களில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ஏ ஜெயதிலக்கைப் விமர்சித்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக இவர், கோழிக்கோடு மாவட்ட கலெக்டராகவும் மற்ற உயர் பதவிகளையும் வகித்துள்ளார். இவர் இடைநீக்கம் செய்யப்படும் வரை வேளாண் துறையின் சிறப்புச் செயலாளராகப் பணியாற்றினார்.
மேலும், கோழிக்கோடு மாவட்ட கலெக்டராக இருந்த காலத்தில் சமூக முயற்சிகளுக்காக பிரபலமானார். அதுமட்டுமல்லாமல், Collector Bro, Life Boy, Broswami Stories ஆகிய மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார்.
இதனிடையே மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி கே கோபாலகிருஷ்ணன் என்பவரும் அரசு அதிகாரிகளுக்கு மதம் சார்ந்த வாட்ஸ்அப் குழுவை உருவாக்கிய குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில், ஜனவரி மாதத்தில் கோபாலகிருஷ்ணனை கேரள அரசு மீண்டும் பணியில் அமர்த்தியது. ஆனால் பிரசாந்தின் இடைநீக்கத்தை மேலும் 120 நாட்களுக்கு நீட்டித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |