10 முறை தோல்வியடைந்து 2-வது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்ற IAS அதிகாரி
10 முறை தோல்வியடைந்து இரண்டாவது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்ற IAS அதிகாரி யார் என்பதை பார்க்கலாம்.
யார் அவர்?
UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் (CSE) தேர்ச்சி பெறுவது ஒரு சவாலான சாதனையாகும். இருப்பினும் நிர்வாக சேவைகளில் நுழைய வேண்டும் என்ற கனவுகளால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் அதை முயற்சி செய்கிறார்கள்.
இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்தவர் அவனிஷ் ஷரன். இவர், தனது ஆரம்பக் கல்விக்காக ஒரு அரசுப் பள்ளியில் படித்தார்.
10 ஆம் வகுப்பில் 44.7% மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். பின்னர் சற்று முன்னேறி, 12 ஆம் வகுப்பில் 65% மற்றும் பட்டப்படிப்பில் 60% பெற்றார்.
இருப்பினும், UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று IAS அதிகாரியாக வேண்டும் என்று அவனிஷ் ஷரன் கனவு கண்டார்.
அதனால், UPSC மத்திய காவல் படைகள் (CPF) மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS) தேர்வுகளையும் எழுதினார். ஆனால் அவற்றில் தேர்ச்சி பெற முடியவில்லை. பின்னர், மாநில PCS முதல்நிலைத் தேர்வில் 10 முறை தோல்வி அடைந்தார்.
ஆனால், UPSC CSE-யில் தனது முதல் முயற்சியிலேயே, அவனிஷ் ஷரன் நேர்காணல் நிலைக்கு வந்தார். ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து இரண்டாவது முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய தரவரிசை (AIR) 77 ஐப் பெற்றார்.
அவனிஷ் 2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகி தற்போது சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் பணியாற்றி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |