நோயாளி போல மருத்துவமனைக்கு சென்ற IAS அதிகாரி! காலாவதி மருந்துகளை தூக்கிவீசும் வீடியோ வைரல்
பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மருத்துவமனைக்கு நோயாளி போல சென்று காலாவதியான மருந்துகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
மருத்துவமனை மீது புகார்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஃபிரோசாபாத் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) ஆக உள்ளவர் க்ரதி ராஜ். 2021 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவரிடம் அரசு மருத்துவமனை குறித்து புகார் வந்தது.
அதாவது மருத்துவமனையின் பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாதது, காலாவதியான மருந்துகள் என புகாரில் கூறப்பட்டிருந்தது.
IAS அதிகாரியின் செயல்
இதனால், மருத்துவமனையில் விசாரணை நடத்துவதற்காக தலையில் முக்காடு அணிந்தபடி நோயாளி போலவே க்ரதி ராஜ் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவர் மருந்தகத்தில் காலாவதியான மருந்துகள் இருந்ததை கண்டறிந்தது மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு ஊசி, மருந்துகள் வழங்காததையும் கண்டறிந்தார்.
"This is all expired. What kind of pharmacist duty are you doing? Do you ever check?": SDM Kriti Raj during a surprise check at a govt hospital in UP's Firozabad.#SDM #Firozabad #UP #LokSabhaElection2024 pic.twitter.com/pDJZYxcVx2
— FazaL (@real_fazal) March 13, 2024
அவர் அங்கு வந்து மருத்துவரிடம் நோயாளியை போலவே பரிசோதனை மேற்கொண்டார். அப்போது, மருத்துவரின் பணி ஒழுங்கின்மை, பணி நேரத்தில் பணியாளர்கள் பணியில் இல்லாதது போன்ற விடயங்களை ஆய்வில் கண்டறிந்தார்.
பின்னர், அனைத்து விதிமீறல்களுக்கும் நடவடிக்கை எடுக்குமாறு க்ரதி ராஜ் உத்தரவிட்டார். அப்போது, மருத்துவ பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அங்கிருந்த காலாவதியான மருந்துகளை பார்வையிட்டு அதனை வீசினார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |