15 ஆண்டுகளாக சிக் லீவில் இருக்கும் ஊழியர்; சம்பள உயர்வு கேட்டு பிரபல நிறுவனத்தின் மீது வழக்கு
அமெரிக்காவில் 15 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்ட விடுப்பில் இருக்கும் ஊழியர் ஒருவர் தனக்கு சம்பள உயர்வு கொடுக்கவில்லை என தான் வேலைபார்க்கும் நிறுவனத்தின்மீது வழக்கு தொடுத்துள்ளார்.
அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான IBM-ல் மூத்த IT நிபுணராக பணியாற்றிவந்த Ian Clifford எனும் ஊழியர், 2008-ஆம் ஆண்டு முதல் நோய்வாய்ப்பட்ட விடுப்பில் இருக்கிறார்.
இந்நிலையில், விடுப்பு தொடங்கியதிலிருந்து கடந்த 15 ஆண்டுகளாக தனக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்பதற்காக, நிறுவனம் பாரபட்சம் காட்டுவதற்காக தனது முதலாளியை நீதிமன்றத்திற்கு இழுத்துள்ளார்.
Ian Clifford/LinkedIn
தான் வேலை செய்யாமல் இருந்த 15 வருடங்களாக சம்பளம் உயர்த்தப்படாததால், தான் ஊனமுற்ற பாகுபாட்டுக்கு ஆளானதாக அவர் கூறியுள்ளார்.
IBM நிறுவன சுகாதாரத் திட்டத்தின் கீழ், IT நிபுணர் ஆண்டுக்கு 54,000 பவுண்டுகளுக்கு மேல் (ரூ. 55,30,556) பெறுகிறார், மேலும் அவர் 65 வயது வரை சம்பளத்தைப் பெறுவார். ஆனால், பணவீக்கம் காரணமாக அவரது சம்பளம் காலப்போக்கில் குறைவானதாக இருக்கும் என்பதால், சுகாதாரத் திட்டம் போதுமானதாக இல்லை என்று அவர் வாதிட்டார்.
கிளிஃபோர்ட் முதன்முதலில் செப்டம்பர் 2008-ல் நோய்வாய்ப்பட்ட விடுப்பில் சென்றார். 2013-ல் அவர் ஒரு குறையை எழுப்பினார். அவரது புகாருக்கு செவிசாய்த்து, ஐபிஎம் அவருக்கு ஒரு 'சமரச ஒப்பந்தத்தை' வழங்கி, அவர் நிறுவனத்தின் இயலாமை திட்டத்தில் சேர்க்கப்பட்டார். இந்த இத்திட்டத்தின் கீழ், அவர் எக்காரணத்திற்காகவும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்.
இதனால் அவர் தொடர்ந்து ஐபிஎம் பணியாளராகவே இருக்கிறார். மேலும் அவர் ''வேலை செய்ய எந்தக் கடமையும் இல்லை''.
Getty Images
இத்திட்டத்தில் பணிபுரியும் ஒரு பணியாளருக்கு அவர் நோயொலிருந்து மீளும் வரை அல்லது ஓய்வு பெரும் வரை அல்லது இறப்பு வரை அனைத்து உரிமையும் உள்ளது.
அதன்படி, அவருக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட வருவாயில் 75% அவருக்கு செலுத்த வேண்டும். அவரது விஷயத்தில், அவர் ஒப்புக்கொண்ட சம்பளம் 72,037 பவுண்டுகள், அதாவது 2013 முதல் அவருக்கு 25% கழிக்கப்பட்ட பிறகு ஆண்டுக்கு 54,028 பவுண்டுகள் வழங்கப்படும். அவர் ஓய்வு பெறும் 65 வயதை அடையும் வரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டம் நீடிக்கும்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு (2022) பிப்ரவரியில், தன மீது பாகுபாடு காட்டுவதாக IBM-ஐ வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்திற்கு அழைத்துச் சென்றார்.
ஆனால், அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை, ஏனெனில் ஒரு வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் அவரது கோரிக்கைகளை நிராகரித்தது. நீதிபதி அவருக்கு "மிகவும் கணிசமான பலன்" மற்றும் "சாதகமான சிகிச்சை" கொடுக்கப்பட்டதாகக் கூறினார்.