இங்கிலாந்தை அலறவிட்ட 23 வயது வீரர்! Champions Trophyயில் 150 ரன் விளாசல்
லாகூரில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இப்ராஹிம் ஜட்ரான் சதம் விளாசினார்.
ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டம்
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் லாகூரில் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்து களமிறங்கியது.
குர்பாஸ் (6), ரஹ்மத் ஷா (4) சொதப்பிய நிலையில், தொடக்க வீரர் இப்ராஹிம் ஜட்ரான் (Ibrahim Zadran) இங்கிலாந்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.
முதல் வீரர்
சிக்ஸர், பவுண்டரி என எதிரணி பந்துவீச்சாளர்களை அலறவிட்ட அவர் 6வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
மேலும் அவர் 134 பந்துகளில் 150 ஓட்டங்களை எட்டினார். இதில் 4 சதம், 11 பவுண்டரிகள் அடங்கும்.
𝐇𝐔𝐍𝐃𝐑𝐄𝐃! 💯
— Afghanistan Cricket Board (@ACBofficials) February 26, 2025
Terrific stuff from @IZadran18 as he brings up an astonishing hundred against England at the ICC #ChampionsTrophy 2025 in Lahore. 🤩
This is his 6th hundred in ODIs and is the first century in #ChampionsTrophy by an Afghan batter. 👏#AfghanAtalan | #AFGvENG… pic.twitter.com/wWqVaXQ4fi
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |