இலங்கை அணிக்கு எதிராக 162 ஓட்டங்கள் விளாசிய வீரர்! 314 ஓட்டங்கள் இலக்கு
பல்லேகலை மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 314 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்ததுள்ளது ஆப்கானிஸ்தான்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது. அத்யடுத்து, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரண்டாவது போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டது.
314 ஓட்டங்கள் இலக்கு
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்கள் குவித்த ஆப்கானிஸ்தான், இலங்கை அணிக்கு 314 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்ததுள்ளது.
இப்ராஹிம் சத்ரான் சதம்
இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரான் அதிரடியாக விளையாடி 162 ஓட்டங்களை விளாசினார்.
138 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 162 ரன்களை எடுத்த சத்ரான், 39-வது ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அடுத்த 38 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 1 - 0 என்ற அடிப்படையில் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இன்றைய போட்டியில் தொடரை சமப்படுத்தும் முனைப்புடன் 314 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கி விளையாடிவருகிறது.