இலங்கை, இந்தியாவில் மகளிர் உலகக்கிண்ணம்: இதுவரை இல்லாத பாரிய பரிசுத்தொகை..எவ்வளவு தெரியுமா?
மகளிர் உலகக்கிண்ணத் தொடருக்கான பரிசுத் தொகையை ஐசிசி நான்கு மடங்கு அதிகரித்து வெளியிட்டுள்ளது.
வியக்கத்தக்க அறிவிப்பு
இந்தியா மற்றும் இலங்கையில் 2025 ஐசிசி மகளிர் உலகக்கிண்ணத் தொடர் செப்டம்பர் 30ஆம் திகதி தொடங்குகிறது. இதில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
இதற்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வியக்கத்தக்க வகையில் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி 2025 ஐசிசி உலகக்கிண்ணத்திற்கான மொத்த பரிசுத்தொகை 13.88 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.121 கோடி) ஆகும்.
ரூ.39.52 கோடி
இது கடந்த 2022ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற தொடரின் பரிசுத்தொகையை விட 297 சதவீதம் அதிகமாகும்.
அதாவது அப்போது 3.5 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகையாக இருந்தது. 2025 உலகக்கிண்ணத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 4.48 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.39.52 கோடி) பரிசுத்தொகையாக கிடைக்கும்.
அதேபோல் இரண்டு இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.19.77 கோடியும், அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா ரூ.9.88 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு குறித்து ஐசிசி தலைவர் ஜெய் ஷா கூறுகையில், "இந்த அறிவிப்பு பெண்கள் கிரிக்கெட் பயணத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட மைல்கல்லைக் குறிக்கிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |