2032 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்? ஒலிம்பிக் கமிட்டி தலைவருடன் ஜெய் ஷா சந்திப்பு
2032 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கும் முயற்சியில் ஒலிம்பிக் கமிட்டி தலைவரை ICC தலைவர் ஜெய் ஷா நேரில் சந்தித்துள்ளார்.
பிரிஸ்பேன் 2032 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) தலைவர் தாமஸ் பாக்கை ஐசிசி தலைவர் ஜெய் ஷா சந்தித்தார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் ஜனவரி 30-ம் தேதி சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் நடைபெற உள்ளது.
செவ்வாய்க்கிழமை, ஜெய் ஷாவின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஐசிசி, ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த வாரம் சுவிட்சர்லாந்தின் லாசேனில் ஐ.ஓ.சி தலைவர் தாமஸ் பாக்கை ஜெய் ஷா சந்தித்தார் என பதிவிட்டுள்ளது.
ஜெய் ஷா கடந்த மாதம் Cricket Australia-ன் தலைமை நிர்வாக அதிகாரியையும் சந்தித்தார், இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் நேரத்தில் ஷா பிரிஸ்பேனில் இருந்தார், அப்போது அவர் 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கக் கோரினார்.
[B1AKHQZ ]
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் (LA) ஒலிம்பிக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளராக கிரிக்கெட்டைச் சேர்ப்பதில் ஜெய் ஷா முக்கிய பங்கு வகித்தார்.
அக்டோபர் 2024-இல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 30 ஜனவரி 2025 அமர்வு கூட்டம் குறித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதன்படி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வு வரும் 30-ஆம் திகதி லாசேனில் உள்ள ஒலிம்பிக் ஹவுஸில் நடைபெறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |