211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! மேற்கிந்திய தீவுகள் அணியை சிதறடித்த இந்திய அணி
பெண்கள் ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் அபாரமான பேட்டிங்
ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் பெண்கள் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இந்திய பெண்கள் அணி மோதியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெண்கள் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஸ்மிருதி மந்தனா 91 ஓட்டங்களும், பிரதிகா ராவல் 40 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
இதன் மூலம் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பு 314 ஓட்டங்கள் குவித்தது.
Dominating Win 💪 #TeamIndia complete a 211 runs victory over the West Indies in the first ODI 👌
— BCCI Women (@BCCIWomen) December 22, 2024
Scoreboard ▶️ https://t.co/OtQoFnoAZu#INDvWI | @IDFCFIRSTBank pic.twitter.com/WHTFt8qz8u
அபார வெற்றி
இதையடுத்து வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 26.2 ஓவர்கள் முடிவிலேயே 10 விக்கெட்களையும் இழந்து வெறும் 103 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக அஃபி பிளெட்சர் 24 ஓட்டங்கள் குவித்தார்.
For her maiden 5 wicket haul in ODI for #TeamIndia Renuka Singh Thakur wins the Player of the Match Award 🏆
— BCCI Women (@BCCIWomen) December 22, 2024
Scoreboard ▶️ https://t.co/OtQoFnoAZu#INDvWI | @IDFCFIRSTBank pic.twitter.com/GwWYfZ2Rne
இந்திய அணியின் பந்து வீச்சில் ரேணுகா தாக்கூர் சிங் 5 விக்கெட்டுகளை பறித்து அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி இந்திய அணி 211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |