ஓய்வு அறிவிப்பால் அனைவரையும் போல்டாக்கிவிட்டீர்களே அஸ்வின்: பிரதமர் நரேந்திர மோடி கடிதம்
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு அறிவித்ததால் அனைவரும் அவரை தவற விடுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அஸ்வின் ஓய்வு
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி முடிந்த தருவாயில் அவர் வெளியிட்ட இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அஸ்வினுக்கு பிரியாவிடை அளித்தனர்.
மோடி கடிதம்
இந்த நிலையில் அஸ்வின் ஓய்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர், "உங்களிடம் இருந்து இன்னும் பல ஆஃப் பிரேக் பந்துகளை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஓய்வு என்ற கேரம் பந்தை வீசி அனைவரையும் போல்டு ஆக்கிவிட்டீர்கள். ஆஃப் ஸ்பின் பந்துவீச்சில் பல்வேறு மாறுதல்களை காட்டி துடுப்பாட்ட வீரர்களை வீழ்த்தக் கூடிய திறன் பெற்றவர். உங்களது 99 ஜெர்சியை ரசிகர்கள் தவற விடுவார்கள்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |