மண்ணை கவ்விய இலங்கை: 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த இலங்கை
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலி பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணியில் பாத்தும் நிஸ்ஸங்க 46 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 39 ஓட்டங்களையும், சமரவிக்ரம 36 ஓட்டங்களையும் குவித்தனர்.
இதன் மூலம் இலங்கை அணி 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 241 ஓட்டங்களை குவித்து இருந்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக பசல்ஹக் ஃபாரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
வெற்றி வாகை சூடிய ஆப்கானிஸ்தான்
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஓட்டங்கள் எதுவும் குவிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறி இருந்தாலும், பின்னர் வந்த வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரஹ்மத் ஷா(62), அஸ்மதுல்லா உமர்சாய்(73), ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(58) ஓட்டங்களை குவித்து அசத்தினர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்கள் முடிவிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 242 ஓட்டங்களை குவித்தது.
அத்துடன் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |