இங்கிலாந்தை சூறையாடிய பும்ரா, ஷமி: 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள்
லக்னோ மைதானத்தில் நடைபெற்ற 13வது உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
குறிப்பாக கோலி ரன் எடுக்காமல் அவுட் ஆனது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருப்பினும் கே.எல் ராகுல் 39 ஓட்டங்கள் எடுத்து இருந்த போது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா 87 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
இக்கட்டான நிலையில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் அதிரடியாக 49 ஓட்டங்கள் எடுத்தார். பும்ரா 16 ஓட்டங்களும், குல்தீப் 9 ஓட்டங்களும் எடுக்க இந்திய அணி 229 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்தின் வில்லி 3 விக்கெட்டுகளும், வோக்ஸ் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
சூறையாடிய இந்திய பந்துவீச்சாளர்கள்
இதையடுத்து சற்று எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
WIN by 💯 runs in Lucknow ✅
— BCCI (@BCCI) October 29, 2023
🔝 of the table with 6⃣ wins in a row!#TeamIndia 🇮🇳#CWC23 | #MenInBlue | #INDvENG pic.twitter.com/oKmCLpCzUt
முன்னணி வீரர்களான தாவீத் மலான் 16 ஓட்டங்களில் பும்ரா பந்துவீச்சில் போல்டு ஆனார், அவரை தொடர்ந்து அதே ஓவரில் ஜோ ரூட் LBW முறையில் விக்கெட்டை பறி கொடுத்தார். பின்னர் வந்த ஸ்டோக்ஸ் ஓட்டங்கள் எதுவும் குவிக்காமல் ஷமி ஓவரில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார்.
இங்கிலாந்து அணியில் அதிகப்பட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 46 பந்துகளில் 27 ஓட்டங்கள் குவித்தார்.
Not a good day to be a stump 😅#INDvsENG pic.twitter.com/tEmz0bajeC
— Cricbuzz (@cricbuzz) October 29, 2023
இதன்மூலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |