இந்தியா-தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை: ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்தியா தென்னாப்பிரிக்கா மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பலந்த வாய்ந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டனர்.
இருப்பினும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்த தென்னாப்பிரிக்க அணி கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.
வீரர்களின் பலம்
இரண்டு அணி வீரர்களும் சரிசமமான பலத்துடன் காணப்படுகின்றனர். ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக வெளியேறி இருந்தாலும், ரோகித் சர்மா, விராட் கோலி, கில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அசத்தலான விளையாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பந்துவீச்சில் முகமது சமி, பும்ரா, குல்தீப், சிராஜ் ஆகியோர் கலக்கி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டி காக் முதலிடத்தில் உள்ளார்.
மேலும் வான்டெர் டஸன், கிளாசன், மார்க்ரம், மில்லர் ரபாடா, கேஷவ் மகராஜ், யான்சென் என தென்னாப்பிரிக்கா அணியும் மிகவும் பலமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |