சூறையாடிய இந்திய வீரர்கள்: இலங்கைக்கு 358 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 258 ஓட்டங்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்ற இலங்கை
13வது உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றனர்.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தரும் விதமாக கேப்டன் ரோஹித் சர்மா 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
வெளுத்து வாங்கிய இந்திய வீரர்கள்
ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை உச்சத்திற்கு அழைத்து சென்றனர்.
சுப்மன் கில் 92 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசி 92 ஓட்டங்கள் குவித்து இருந்த போது தில்ஷான் மதுஷங்க பந்துவீச்சில் விக்கெட் பறிகொடுத்து வெளியேறினார்.
India register their highest total of #CWC23 ?️
— Royal Challengers Bangalore (@RCBTweets) November 2, 2023
Over to our bowlers to seal the semi-final spot! ?#PlayBold #INDvSL #TeamIndia pic.twitter.com/m95Ud9ZsqW
இவரை தொடர்ந்து விராட் கோலியும் 94 பந்துகளில் 88 ஓட்டங்கள் குவித்து இருந்த போது தில்ஷான் மதுஷங்க பந்துவீச்சில் விக்கெட் பறிகொடுத்து வெளியேறினார்.
அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் விளாசி 82 ஓட்டங்கள் குவித்தார். துரதிஷ்டவசமாக அவரும் சதத்தை பூர்த்தி செய்ய முடியாமல் தில்ஷான் மதுஷங்க பந்துவீச்சில் விக்கெட் பறிகொடுத்து வெளியேறினார்.
Dilshan Madushanka on fire! ? Five-wicket haul and now the leading wicket-taker of #CWC23! #SLvIND #LankanLions pic.twitter.com/6Lk0gae3PR
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) November 2, 2023
இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்து அசத்தியது.
இலங்கை அணியின் பந்துவீச்சு பொறுத்தவரை தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |