307 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயம்: அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெறுமா பங்களாதேஷ்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 307 ஓட்டங்களை இலக்காக பங்களாதேஷ் அணி நிர்ணயித்து உள்ளது.
அவுஸ்திரேலியா-பங்களாதேஷ் மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றனர்.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ஓட்டங்கள் குவித்துள்ளது.
பங்களாதேஷ் அணியில் அதிகப்பட்சமாக தவ்ஹித் ஹரிதி 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 79 பந்தில் 74 ஓட்டங்களை குவித்தார்.
மேலும் சாண்டோ (45), தன்சித் ஹசன்(36), லிட்டன் தாஸ்(36) ஓட்டங்களை குவித்து அணியின் மொத்த ஸ்கோருக்கு உதவினர்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை அபோட் மற்றும் ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸ்
இதையடுத்து 307 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள அவுஸ்திரேலிய அணி 15 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 100 ஓட்டங்கள் குவித்து விளையாடி வருகிறது.
மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசி 51 ஓட்டங்கள் சேர்த்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |