பரிதாப நிலையில் தென் ஆப்பிரிக்கா: மழை குறுக்கிட்டதால் அரையிறுதி ஆட்டம் பாதிப்பு
உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி மழையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது அரையிறுதி
13வது உலக கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடி வருகின்றனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா ஓட்டங்கள் எதுவும் குவிக்காமலும், நட்சத்திர வீரர் டி காக் 3 ஓட்டங்களுடனும் வெளியேறி தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரஸ்ஸி வான் டெர் டுசென்(6), ஐடன் மார்க்ராம் (10) ஓட்டங்களுக்கும் வெளியேறி தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவு தந்தனர்.
11.5 ஓவர்கள் முடிவிலேயே 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் பறிபோன பிறகு, தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோரை உயர்த்த கிளாசென்(10), டேவிட் மில்லர் (10) ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் போட்டியை மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |