உலக கோப்பை தகுதி சுற்று போட்டி: 40 ஓவரிலேயே நெதர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி
உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நெதர்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த நெதர்லாந்து
உலக கோப்பை போட்டிகளுக்கான தகுதி சுற்று தொடரின் 5வது போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
Incredible batting from Netherlands against Zimbabwe to post their joint-highest total in ODI cricket ?
— ICC (@ICC) June 20, 2023
?: #ZIMvNED: https://t.co/jdzigenjiT | #CWC23 pic.twitter.com/r7LJ8uqC6X
அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ஓட்டங்கள் சேர்த்தது.
நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங்(88), மேக்ஸ் ஓடோவ்ட்(59), கேப்டன் எட்வர்ட்ஸ்(83) ஆகிய ஓட்டங்களை குவித்து அசத்தினர்.
அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே
இதையடுத்து 316 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் கிரேக் எர்வின் அரை சதம் அடித்தார்.
Two out of two for Zimbabwe ??! #ZIMvNED | #CWC23 pic.twitter.com/3MvfYRn1cs
— Zimbabwe Cricket (@ZimCricketv) June 20, 2023
அவரை தொடர்ந்து வந்த சீன் வில்லியம்ஸ் சிறப்பாக விளையாடி 91 ஓட்டங்கள் குவித்தார்.
மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்கந்தர் ராசா 54 பந்துகளில் 102 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.
இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 40.5 ஓவர்கள் முடிவிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 319 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |