உலக கோப்பை தொடர் ரத்தா? பாகிஸ்தான் அறிவிப்பால் பிசிசிஐ அதிர்ச்சி!
பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து விளையாடுவதற்கு தயங்குகிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதால் பிசிசிஐக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம்
வரும் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி நடைபெற உள்ளது. அதற்கான அட்டவணை இன்னும் ஐசிசியால் வெளியிடப்படவில்லை.
இதற்கு காரணம் பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் இடையே நடந்த அரசியல் யுத்தம்தான்.
பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து விளையாடுவதற்கு தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எழுதிய கடிதத்தில், நாங்கள் இந்தியாவிற்கு வர வேண்டும் என்றால் அது எங்கள் நாட்டின் அரசு கையில் உள்ளது. எங்கள் நாட்டு வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விளையாட அனுமதிகொடுக்காமலும் போகலாம்.
இந்தியாவிற்கு வந்து விளையாடுவதில் எங்களுக்கு சிக்கல் இருக்கிறது. அக்டோபர் மாதம் தானே போட்டி நடைபெற உள்ளது. அதற்குள் இப்போதே அதைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது.
குழப்பத்தில் பிசிசிஐ
உலகக்கோப்பை தொடருக்கு 6 மாதத்திற்கு முன்பே அட்டவணை வெளியிடுவது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதியான தங்களது பதிலை தெரிவித்துள்ளதால், என்ன செய்வது என்று தெரியாமல் பிசிசிஐ குழம்பி வருகிறது. ஒருவேளை பாகிஸ்தான் இத்தொடரிலிருந்து விலகினால் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |