இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்த விவகாரம் - பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி
வீரர்கள் கை குலுக்க மறுத்த விவகாரத்தில் நடுவரை நீக்கும் பாகிஸ்தானின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
கை குலுக்க மறுத்த இந்தியா
2025 ஆசிய கோப்பையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வழக்கமாக கிரிக்கெட் போட்டியின் போது இரு அணி வீரர்களும் கை குலுக்குவது வழக்கம். ஆனால், இந்த போட்டியில், பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்தனர். இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் அணி நிர்வாகம், இந்த விவகாரம் தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐசிசியிடம் முறையிட்டது.
நடுவரை நீக்க மறுத்த ஐசிசி
ஐசிசிக்கு எழுதிய கடிதத்தில், போட்டியின் நடுவராக இருந்த ஆண்டி பைஃகிராப்ட் நீக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி, ஆண்டி பைஃகிராப்ட் நீக்க மறுத்து மறுத்தது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இன்றைய போட்டியில், ஆண்டி பைஃகிராப்ட்டே நடுவராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனையடுத்து, ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2வது கடிதத்தை எழுதியுள்ளது.
இந்த கடிதத்தில், "அணித்தலைவர்களுக்கு மத்தியிலும், போட்டியிடும் இரு அணிகளுக்கு இடையேயும் மரியாதை பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதிலும், தனது நடத்தையால் நேர்மறையான சூழ்நிலையை உருவாக்குவதிலும் போட்டி நடுவர் தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டார்.
இந்த தவறான நடத்தை ஐ.சி.சி போட்டி அதிகாரிகளுக்கான நடத்தை விதிகளின் பிரிவு 2 ஐ மீறுகிறது. போட்டி நடுவர் தன்னை விளையாட்டின் உணர்வுக்கு முரணான மற்றும் எம்.சி.சி சட்டங்களை மீறும் வகையில் நடந்துகொள்வது குற்றமாகும்.
அரசியல் தன்மை மற்றும் தொலைநோக்கு விளைவுகளைக் கருத்தில் கொண்டு, தவறான நடத்தை விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது" என தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, இன்றைய போட்டியில் ஆண்டி பைஃகிராப்ட்டிற்கு பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் நடுவராக நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐயின் உத்தரவின் பேரில் பைக்ராஃப்ட் செயல்படுவதாக போட்டி இயக்குநர் Andre Russell பாகிஸ்தான் அணி இயக்குநர் நவீத் அக்ரம் சீமாவிடம்(Naveed Akram Cheema) கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குநர் உஸ்மான் வால்ஹாவை(Usman Wahla), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி இடைநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |