அதிர்ச்சியில் இலங்கை கிரிக்கெட்; ICC எடுத்த முக்கிய முடிவுகள்
இலங்கை கிரிக்கெட் மீதான தடையை ஐசிசி நீக்கியது, ஆனால் U19 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை இலங்கை இழந்தது.
இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உறுப்பினர்கள் கூட்டத்தில், இலங்கை கிரிக்கெட் (SLC) இடைநிறுத்த முடிவு குறித்தும், ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
2024-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியை இலங்கையில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்ற ஐசிசி வாரியம் முடிவு செய்தது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் இலங்கை அரசாங்கத்தின் விரிவான தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் (SLC) ஐ.சி.சி சமீபத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தியதன் விளைவாக, வாரியத்தின் ஒருமித்த முடிவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் (SLC) தரப்பைக் கேட்ட பிறகு, இருதரப்பு கிரிக்கெட் மற்றும் ஐசிசி போட்டிகளில் இலங்கை அணிகள் சர்வதேச அளவில் விளையாடலாம் என்று ஐசிசி வாரியம் முடிவு செய்தது.
இஸ்ரோ வேலையை விட்டுவிட்டு ரூ.5000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய விஞ்ஞானி., எலான் மஸ்க்கிற்கு போட்டியாக வரவுள்ள இந்தியர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Sri Lanka Cricket, International Cricket Council, Under-19 World Cup 2024, South Africa