ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை! மளமளவென மேலே வந்த இந்திய வீரர்... அசத்தும் இலங்கை புயல்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி20 கிரிக்கெட்டுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் அபார முன்னேற்றத்தை கண்டுள்ளார். அதன்படி தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார் அவர்.
சூர்யகுமார் யாதவ் தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். மூன்றாவது டி20 போட்டியில் 44 பந்துகளில் 76 ரன்கள் விளாசி இருந்தார். முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சதம் பதிவு செய்திருந்தார் அவர்.
மொத்தம் 816 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு இப்போது முன்னேறியுள்ளார் சூர்யகுமார். இதன் மூலம் டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை காட்டிலும் வெறும் 2 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார் அவர்.
? Suryakumar's rapid rise
— ICC (@ICC) August 3, 2022
? Hosein makes big gains
? Markram breaks into the top ?
Some big movements in the @MRFWorldwide ICC Men's T20I Player Rankings ?
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மேலும் இரண்டு டி20 போட்டிகள் நடைபெறவுள்ளது. அதிலும் சூர்யகுமார் யாதவ் தனது அபார ஃபார்மை தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது நடந்தால் அவர் டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இப்பட்டியலில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 794 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
இலங்கையின் பதும் நிஷங்கா 661 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறார்.