நெதன்யாகு கைது... ஐரோப்பிய நாடுகள் ஒன்றுபட வேண்டும்: வலியுறுத்தும் முதன்மை அதிகாரி
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைதாணையை ஐரோப்பிய நாடுகள் புறக்கணிக்க முடியாது என ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரக் கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸ் தலைவர் இப்ராஹிம் அல்-மஸ்ரி ஆகியோர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை கைதாணை பிறப்பித்தது.
இந்த நிலையில், பிரித்தானியாவும் கனடாவும் நெதன்யாகு கைது குறித்து உறுதி அளித்துள்ளது. ஜேர்மனி பின்னர் முடிவினை அறிவிக்க உள்ளது. இந்த நிலையிலேயே ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் நெதன்யாகுவை தனது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் ஐரோப்பிய நாட்டில் கைது செய்யப்படுவோம் என்ற அச்சமும் வேண்டாம் என ஓர்பான் உறுதி அளித்துள்ளார். இதனையடுத்தே ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரக் கொள்கை தலைவர் Josep Borrell ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் ஒன்றுபட வேண்டும்
மேலும், ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் முடிவை செயல்படுத்த கடமைப்பட்டுள்ளன என்றார். மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விரும்பும் நாடுகளும், சர்வதேச நீதிமன்றத்தின் முடிவை செயல்படுத்தவும் கடமைப்பட்டுள்ளன என்றார்.
நெதன்யாகு கைது விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நீதிமன்றத்தின் முடிவை ஏற்கனவே அமெரிக்கா நிராகரித்துள்ளது. இந்த நடவடிக்கை யூத விரோதமாக உள்ளது என இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த 13 மாதங்களாக காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்துவரும் போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 44,000 கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |