Wow... 50வது உலகக்கோப்பை கிரிக்கெட்: சென்னை சேப்பாக்கத்தில் 5 போட்டிகள் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோம்பர் 5ம் தேதி தொடங்க உள்ளது.
இப்போட்டி அக்டோம்பர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தியாவில் இப்போட்டிகள் 10 மைதானங்களில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்தும் மோத உள்ளன.
இப்போட்டி அக்டோம்பர் 5ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. நவம்பர் 19-ம் தேதி உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடக்க உள்ளது.
இந்நிலையில், 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. அந்த அட்டவணையில் 5 போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ளன.
இதோ அந்த அட்டவணை:
அக்டோபர் 8ம் தேதி : ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
அக்டோபர் 14ம் தேதி : சனிக்கிழமை அன்று நியூசிலாந்து- வங்காளதேசம் மோதல்
அக்டோபர் 18ம் தேதி : புதன்கிழமை அன்று நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் மோதல்
அக்டோபர் 23ம் தேதி : திங்கட்கிழமை அன்று பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் மோதல்
அக்டோபர் 27ம் தேதி : வெள்ளிக்கிழமை அனறு பாகிஸ்தான்- தென்னாப்பிரிக்கா மோதல்
இந்தியா இத்தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாக வெளியான அட்டவணையால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியிலும், சோகத்தில் உள்ளனர்.
?? Team India's fixtures for ICC Men's Cricket World Cup 2023 ??
— BCCI (@BCCI) June 27, 2023
#CWC23 #TeamIndia pic.twitter.com/LIPUVnJEeu
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |