கிரீன் கார்டு ஆசை காட்டி துஷ்பிரயோகம் செய்த குடிவரவு அதிகாரி - லெபனான் இளம்பெண் குற்றச்சாட்டு
ICE Agent Accused of Green Card Sex Offer Case: கிரீன் கார்டு ஆசை காட்டி குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அதிகாரி துஷ்பிரயோகம் செய்ததாக லெபனான் இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
கிரீன் கார்டு ஆசை காட்டி துஷ்பிரயோகம் - லெபனான் இளம்பெண் குற்றச்சாட்டு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் (ICE Detention Facility) பணியாற்றிய அதிகாரி ஒருவர், கிரீன் கார்டு பெற்றுத் தருவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 21 வயதான லெபனான் பெண் ஒருவர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு தற்போது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லெபனானைச் சேர்ந்த ரஹஃப் அலி அல் மெஹ்ரிஜ் (Rahaf Ali Almerhij), "லூசி வைஸ்" என்ற பெயரால் அறியப்படுகிறார்.
அவர் அளித்த தகவலின்படி, டெக்சாஸின் ரேமண்ட்வில்லில் உள்ள எல் வாலே (El Valle) தடுப்பு மையத்தில் இருந்தபோது, ICE அதிகாரி மார்கெல் வாலஸ் (Markell Wallace) தன்னை தனிமைப்படுத்தப்பட்ட அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அடையார் ஆனந்த பவன் உணவகத்தில் 180 மில்லியன் டொலர் முதலீடு - பெரும்பான்மை பங்குகளை வாங்கும் பில்லியனர்
மேலும், தன்னுடைய குடியேற்ற வழக்கில் உதவி செய்து கிரீன் கார்டு பெற்றுத் தருவதாகவும், அதற்குப் பதிலாக பாலியல் உறவு வேண்டுமெனவும் அதிகாரி கூறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பதவி அதிகாரத்தை பயன்படுத்தி அழுத்தம்
தனது கணவர் வயதானவர் என்றும், தன்னை பாதுகாக்க முடியாது என்றும் அதிகாரி கூறியதாகவும், அவர் தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி அழுத்தம் கொடுத்ததாகவும் லூசி தெரிவித்துள்ளார். சம்பவத்தின் போது தாம் கைதியாக இருந்ததால் எதிர்த்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பின்னர் தனது கணவர் சாம் வைஸ்-க்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது.
மனைவி பல மாதங்கள் இந்த விஷயத்தை மறைத்திருந்ததாகவும், அவமானம் மற்றும் பயம் காரணமாக எதையும் சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது மனைவியின் துணிச்சலை பாராட்டிய அவர், குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தற்போது லூசி மெக்சிகோவில் வசித்து வருகிறார். அதே நேரத்தில், இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) முழுமையாக மறுத்துள்ளது. எல் வாலே தடுப்பு மையத்தில் தவறான நடத்தை நடைபெற்றதாக கூறப்படுவது “பொய்யான குற்றச்சாட்டு” என தெரிவித்துள்ள DHS, புகார்கள் அனைத்தும் தீவிரமாக விசாரிக்கப்படுவதாக கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |