ஸ்லீப்பர் செல்கள்... ஈரானியர்களைத் தேடித் தேடி வேட்டையாடும் அமெரிக்கா: இதுவரை 670 பேர்கள்

Donald Trump Iran Iran-Israel War
By Arbin Jun 27, 2025 03:50 AM GMT
Report

ஈரான் - இஸ்ரேஎல் மோதலை அடுத்து அமெரிக்காவில் தங்கியிருக்கும் சந்தேகத்திற்கிடமளிக்கும் ஈரானியர்களை ICE அதிகாதிகள் தேடித் தேடி கைது செய்து வருகின்றனர்.

பழிவாங்கும் நடவடிக்கை

கடந்த வாரத்தில் மட்டும் 130 ஈரானிய பிரஜைகள் ICE அதிகாதிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க மக்களுக்கு எதிராக சதி செய்யும் ஈரானிய பயங்கரவாத ஸ்லீப்பர் செல்கள் பலர் அமெரிக்காவில் தங்கியிருக்கலாம் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்லீப்பர் செல்கள்... ஈரானியர்களைத் தேடித் தேடி வேட்டையாடும் அமெரிக்கா: இதுவரை 670 பேர்கள் | Ice Arrests Iranian Nationals Amid Fears

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது ட்ரம்ப் நிர்வாகம் குண்டுவீச்சு நடத்தியுள்ள நிலையில், ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளால் சாத்தியமான பழிவாங்கும் நடவடிக்கை குறித்து அமெரிக்கா தற்போது கவலை கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் தீவிர நடவடிக்கை முன்னெடுத்த அதிகாரிகள், இதுவரை 670 ஈரானிய பிரஜைகளை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். ICE கைது செய்துள்ள ஈரானிய பிரஜைகளில் ஒருவர், ஈரானிய இராணுவத்தில் மறைந்திருந்து துப்பாக்கியால் சுடும் வீரராக நான்காண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு

மேலும், ஜோ பைடன் ஆட்சியின் போது குறைந்தது 1500 ஈரானியர்கள் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், குடிவரவு அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட 1,504 ஈரானியர்களில், 729 பேர் ஜோ பைடன் நிர்வாகத்தால் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டவர்கள்.

ஸ்லீப்பர் செல்கள்... ஈரானியர்களைத் தேடித் தேடி வேட்டையாடும் அமெரிக்கா: இதுவரை 670 பேர்கள் | Ice Arrests Iranian Nationals Amid Fears

அச்சப்படும் ட்ரம்ப் நிர்வாகம்

தற்போது கைதாகியுள்ள ஈரானியர்கள் பலர் குடும்ப வன்முறை, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வார இறுதியில், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையின் அடிப்படையில் ஈரானிய பிரஜைகளைக் கைது செய்தனர். அமெரிக்காவில் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சப்படும் ட்ரம்ப் நிர்வாகம், முக்கியமான அமெரிக்க நகரங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்லீப்பர் செல்கள்... ஈரானியர்களைத் தேடித் தேடி வேட்டையாடும் அமெரிக்கா: இதுவரை 670 பேர்கள் | Ice Arrests Iranian Nationals Amid Fears

வங்கி அமைப்புகள், மின்சாரக் கட்டமைப்புகள் மற்றும் சைபர் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவிற்கு எதிராக பதிலடி உறுதி என ஈரானிய அதிகாரிகள் உறுதியளித்துள்ள நிலையில், அமெரிக்காவில் ஈரானியர்களின் இருப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் - ஈரான் மோதலின் போது மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ள 50,000 அமெரிக்க இராணுவ வீரர்கள் சவப்பெட்டிகளில் நாடு திரும்பும் நிலை வரும் என ஈரானிய மூத்த ஊடகவியலாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US