காலாவதியான விசா... அமெரிக்காவில் கைதான வெளிநாட்டுப் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு
அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் சீனப் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முடிவுக்கு என்ன காரணம்
பெயர் குறிப்பிடப்படாத 52 வயதுடைய பெண், தனது வருகையாளர் விசா காலாவதியான நிலையிலும் தங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் அரிசோனா மாகாணத்தில் யூமா முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரது இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பது வெளிவரவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை ஜனநாயக காங்கிரஸ் பெண்மணியான பிரமிளா ஜெயபால் வெள்ளிக்கிழமை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார். மட்டுமின்றி, எல்லை அதிகாரிகள் முறைகேடாக செயல்பட்டிருக்கலாம் என்று தமது அறிக்கையில் பிரமிளா ஜெயபால் கடுமையாக சாடியிருந்தார்.
மட்டுமின்றி, அதிகாரிகள் உரிய சோதனைகளை முன்னெடுப்பதில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் புலம்பெயர் மக்களின் நிலைமைகள் குறித்தும் ஜெயபால் கவலை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில்
அந்த பெண் B-1/B-2 விசாவில் அமெரிக்காவில் தங்கியிருந்ததாக ஜெயபால் கூறினார், இது சுற்றுலா அல்லது வணிக நோக்கங்களுக்கான தற்காலிக விசா ஆகும். குறித்த பெண்மணியை கைது செய்துள்ளதை யூமா செக்டரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதில், 52 வயது பெண் மற்றும் 38 வயது ஆணுடன் 220,000-க்கும் அதிகமான டொலர் தொகை கைப்பற்றப்பட்டதாகக் கூறியுள்ளனர். வாகனம் ஒன்றை நிறுத்தி முன்னெடுக்கப்பட்ட சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த பணக்கட்டை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள அந்த பெருந்தொகை சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்புடையது என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், வெள்ளிக்கிழமை கைதான 52 வயது பெண்மணியும், அதிகாரிகள் காவலில் தற்கொலை செய்துகொண்ட பெண்மணியும் ஒருவரா என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |