இலங்கையில் பிடிபட்ட ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்: அரசை விமர்சித்தவர்களுக்கு ஆபத்து!
இலங்கையில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கம் மீது விமர்சனம் வைத்த நபர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஐஸ் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் கடந்த வாரம் மிததெனியவில் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கொள்கலன்கள் பரிசோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல், துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 323 கொள்கலன்களுடன் உள்ளடங்கி இருந்ததாக சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
மேலும் இதனை பொலிஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் தங்கள் பதிவுகளில் மேல் குறிப்பிட்டிருந்தனர்.
விசாரணை தொடக்கம்
இந்நிலையில் ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது விமர்சனம் முன்வைத்தவர்களுக்கு எதிராக அரசு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிப்புரையை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |