பனி உறைந்த ஏரிக்குள் சிக்கிய கொண்ட இளைஞர்கள்: பதைபதைக்கும் வீடியோ காட்சி!
பனி உறைந்த கிரேவ் கோஐர் ஏரில் சிக்கிய இரண்டு இளைஞர்களை அருகில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மரிலாண்ட் தீயணைப்பு துறையினர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிசூரி பகுதியுள்ள கிரேவ் கோஐர் என்ற பனி உறைந்த ஏரியில் பிப்ரவரி 8ம் திகதி பயிற்சியில் ஈடுபடுவதற்காக மரிலாண்ட் தீயணைப்பு துறையினர் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இரண்டு இளைஞர்கள் ஏரியின் குறுக்கே ஓடுவதை கவனித்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
Right place right time for these teenagers as firefighters were training nearby when they fell into an icy pond pic.twitter.com/FMWK1KnOU4
— The Sun (@TheSun) February 13, 2022
அதிலிருந்து 15 நிமிடங்களுக்குள் அந்த இளைஞர்கள் உறைந்த பனி ஏரிக்குள் விழுந்து இருப்பதை தீயணைப்பு குழுவின் தலைமை அதிகாரி கவனித்ததை தொடர்ந்து அந்த இளைஞர்களை மீட்ட உத்தரவிட்டுயுள்ளார். இதனை தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினரும் அந்த இளைஞர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மரிலாண்ட் தீயணைப்பு துறை, பயிற்சியில் தொடங்கிய எங்கள் பணி, இறுதியில் இரண்டு இளைஞர்களை மீட்கும் பணியோடு நிறைவடைந்தாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பனி உறைந்த ஏரி எப்போதுமே ஆபத்து நிறைந்தது எனவும், இந்த இளைஞர்கள் அதிஷ்டாசாலிகள், இவர்களுக்கு அமைந்தது போல் அனைவர்க்கும் அதிஷ்டம் அமையாது எனவும் எச்சரித்துள்ளனர். மேலும் இந்த இளைஞர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட வீரர்களை வாழ்த்துவதாகவும் மரிலாண்ட் தீயணைப்பு துறை அந்த பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மரிலாண்ட் தீயணைப்பு துறை அந்த இளைஞர்களை மீட்ட வீடியோ தற்போது இணையத்தில் 10,000 ஆம் பார்வையாளர்களை கடந்து வைரல் ஆகிவருகிறது.