லண்டனை விட பாரிய பனிப்பாறை! கப்பல், வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல்: பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரிக்கை
லண்டன் நகரத்தை விட பாரிய பனிப்பாறை கப்பல் மற்றும் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விஞ்ஞானிகள் கவலை
பிரித்தானிய விஞ்ஞானிகள் தற்போது உலகின் இரண்டு பாரிய பனிப்பாறைகளை கண்காணித்து வருகின்றனர், அவை விரைவில் கப்பல் போக்குவரத்து, மீன்பிடித்தல் மற்றும் வனவிலங்குகளை தாக்கக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.
ஆதாரங்களின்படி, அண்டார்டிகாவிலிருந்து பிரிந்திருக்கும் இந்த பாரிய உறைந்த பனிப்பாறைகள் உருகி நீராவதற்கு பல தசாப்தங்கள் ஆகலாம்.
BBC
டெல்லியை விட பெரியது
ஆராய்ச்சியாளர்களால் கண்காணிக்கப்படும் இரண்டு பனிப்பாறைகளில், A81 எனும் பனிப்பாறை லண்டனை விட பாரியது மற்றும் A76a எனும் மற்றோரு பனிப்பாறை இன்னும் பெரியது. டெல்லியின் பரப்பளவு 572 சதுர மைல்கள் (1,483 சதுர கிமீ) என்பது குறிப்பிடத்தக்கது. A81 ஜனவரி மாத இறுதியில் பிரண்ட் ஐஸ் ஷெல்ஃபிலிருந்து பிரிந்தது மற்றும் அதிக நேரம் வான்வழியாக புகைப்படம் எடுக்கப்பட்டது.
BBC
இதற்கிடையில், மே 2021-ல் Filchner-Ronne ஐஸ் ஷெல்ப்பில் இருந்து உருவான A76a பனிப்பாறை, தற்போது நீரோட்டங்கள் மற்றும் காற்றினால் பால்க்லாந்து மற்றும் தெற்கு ஜார்ஜியாவை நோக்கி கொண்டு செல்லப்படுகிறது.
பனிப்பாறைகள் உருகும் போது, பாரிய அளவிலான புதிய நீரை கடலில் உற்பத்தி செய்து, சில உயிரினங்கள் செயல்படுவதை கடினமாக்கும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
BAS

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.